மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

0 63
Stalin trichy visit

திருச்சி, மே 16  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில் நேற்று மணப்பாறைக்கு வருகை புரிந்தார். தவெக நிர்வாகிகள் மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம், வையம்பட்டி ஆகிய பகுதிகளில் வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதிக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய தாய்மார்களிடம் குறைகளை கேட்டு அங்கு பிறந்த ஒரு குழந்தைக்கு அருண்ஸ் என்ற பெயர் வைத்தார். அப்போது மருத்துவமனை பின்புறம் சேரக்கூடிய கழிவு குப்பைகளை மணப்பாறை நகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றி சுத்தம் செய்வதில்லை என செவிலியர்கள் புகார் கூறினர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தருகிறேன் என உறுதி அளித்ததுடன், கழிவறைகள் குறைவாக உள்ளதால் அதற்குரிய நிதி ஒதுக்கி கழிவறைகள் கட்டித் தருகிறேன் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.