மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளி

0 424
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை
நகராட்சி நிருவாக துறை அமைச்சர் திரு.கே. என் நேரு., மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  ஆகியோர் இன்று (21.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் ,  மாநகராட்சி மேயர் .மு.அன்பழகன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மரு. செல்வ விநாயகம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை இயக்குனர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர்  கமலம் கருப்பையா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.