திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் காஜாமலை விஜய் தீக்குளிக்க முயற்சி

0 588
Stalin trichy visit

திருச்சி மார்ச் 13 திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி மாநகராட்சி 60 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் தனது வார்டுக்கு எந்தவித பணிகளும் மேற்கொள்வதில்லை என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை ஆணையரிடமும் அதன் நகலை மேயருக்கு கொடுத்துவிட்டு என்னுடைய வார்டில் பணி நடக்கவில்லை என்றால் நான் தீக்குளித்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே வந்தார். இதையடுத்து அவரை சகமாமன்ற உறுப்பினர்கள் சமாதானம் சொல்லி உடனடியாக வந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவரிடத்தில் கூறினர். ஆனால், தான் மீண்டும் வர முடியாது என்று சொல்லி உடனடியாக காரில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வெளியில் வந்த அவருக்கு சகமாமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு சொல்வதை வீடியோ எடுத்த செய்தியாளர்களை யாரும் படமேடுக்க கூடாது என தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற காஜமலை விஜய் சிறிது நேரம் கழித்து மீண்டும் மாநகராட்சி அலுவலகம் வந்து திடீரென பெட்ரோலை தன் தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினரும் கட்சியினரும் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காஜாமலை விஜய் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் சென்று தாக்கியது தொடர்பாக வழக்கு நீதிமன்ற காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் அப்போது காஜாமலை விஜய் உட்பட 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்புவெளியானது  குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.