உலக கண்பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு (NSS)
இணைந்து நடத்திய உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு பலூன் பறக்கவிட்டனர். உறுதிமொழி
உலக கண்பார்வை தினத்தன்று ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் மக்களுக்கு கண் நலம் பற்றிய செய்திகளை வழங்குகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி உலகம் முழுவதிலும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் கொண்டுள்ள தேசம் நமது பாரத தேசம் ஆகும். உலக பார்வை தினத்தையொட்டி கண் நலம் பற்றிய சில முக்கிய செய்திகளையும், ஒரு நோயை குணப்படுத்துவதைக் காட்டிலும் அதனை எவ்வாறு வராமல் தடுப்பது, ஒரு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து குணப்படுத்துவது போன்ற அறிவுறுத்தப்பட்டது. சில முக்கிய செய்திகளையும், இந்த விழிப்புணர்வில்
இந்நிகழ்ச்சியில் போலீஸ் துணை ஆணையர் திருமதி. ஸ்ரீதேவி அவர்கள் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியைத் தொடங்கி வைத்தார்கள். இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதிபா மற்றும் ஜோசப் கணி மருத்துவமனையின் நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் இவர்கள் முன்னிலையில் அனைவரும் தங்கள் கண்களை பரிசோதித்து கொள்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து திரு, Rtn கார்த்திக் நிர்வாக இயக்குனர் (பாரத் குரூப் ஆப் கம்பெனிஸ்) அவர்கள் சிறப்பு விருந்தினாராக பங்கேற்று மாணவர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு தொடர்பான பலூனை பறக்கவிட செய்தார்கள்.
பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் லெட்சுமியிரா அவர்கள் சிறப்புரையாற்றினார்
நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரதிபா இயக்குனர் இந்நிகழ்சிசியின் நோக்கங்களை எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஜோசப் கணிமருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபாபிரபு மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.