அகலங்கநல்லூர் கிராமத்தில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு முகாம்
நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் அகலங்கநல்லூர் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், அகலங்கநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மையை பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அது மட்டுமல்லாமல் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இயற்கை முறை அல்லாது வேதிப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் குறைந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வேதிப்பொருள்களை பயன்படுத்தி வரும் பொருள்களை நாம் உட்கொள்வதால் நமக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது என மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்லட் எட்வினா மற்றும் இதர ஆசிரியர்கள் சந்திரா, கிரேஸ் பரிமளா, சத்யா பிரபு மற்றும் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வை நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா. சாம்குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு. சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர். பா .குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப. நந்தகுமார் முதுநிலை உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடத்தினர்.