பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்…
தொட்டியம் காவல் நிலையத்தில் காவல் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தொட்டியம் காவல் நிலையத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமை வகித்தார். அப்போது குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1986, குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும், குடும்ப வன்முறை சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம்,பணித் தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,பெண்களுக்கான உதவி மைய எண் 181 , சைபர் கிரைம், இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் காவல் ஆய்வாளர் முத்தையன் விரிவாக எடுத்துரைத்தார்.
பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சட்ட பாதுகாப்பு குறித்த அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பயிற்சி பெண் உதவி ஆய்வாளர் பிரியா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தொட்டியம் காவல் நிலைய சக காவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.