குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 330
Stalin trichy visit

திருச்சி, பிப்.19  மாதவாப்பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவாப்பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஜோஸ்மின் தலைமையில் 19ந் தேதி்இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1986 குழந்தை தொழிலாளராக குழந்தை பணி செய்யும் பொழுது உடல் அளவில் மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.