குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திருவெள்ளரை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 10.02.23 நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு,
சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் கிருத்திகா ஆகியோர் போதை பொருளினால் குழந்தைகள் உடல் அளவில், மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் போதைப் பொருட்களை தடுப்பதற்கான வழிமுறைகள், சூற்றுச்சூழலில் மாணவர்களின் பங்கு மற்றும் குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், குழந்தை வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம், இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.