சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஓட்ட பேரணி…

0 314
Stalin trichy visit

திருச்சி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா (நீதிமன்றம்) அருகில் 6ஆவது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று  நடைபெற்ற நடை ஓட்ட பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசு  ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து நடை ஓட்ட பேரணியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர்  ஆர் மீனாகுமாரி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ், இந்திய மருந்து நிறுவனம் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஆர். கண்ணன், தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர் சங்க செயலாளர் கே. எஸ்.மாணிக்கவாசகம்,சித்த மருத்துவ துறை அலுவலர்கள் மருத்துவர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.