சமரச தேர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
திருச்சி ஏப் 9 – தமிழ்நாடு மாநில தீர்வு மையம் , சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின்படியும் இன்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் (புதிய நீதிமன்றம் கட்டிடம்) முன்பாக சமரச தினம் கொண்டாடப்பட்டது.மேலும், இதனைத் தொடர்ந்து சமரச தீர்வு மையத்தின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்,மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய கிறிஸ்டோபர் சமரச விழிப்புணர்வ தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன்,இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன்தலைமை குற்றவியல் நீதிபதி சார்பு நீதிபதிகள். மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், சமரசர்கள் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், சட்ட உதவி எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்றப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள், சட்டத்தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
மேலும் இப்பேரணியை திருச்சிராப்பள்ளி, மாவட்ட சமரச தீர்வு மையம், ஒருங்கிணைப்பாளர் செயலாளர் சார்பு நீதிபதி. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.