அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் ஆர்ப்பாட்டம்

0 164
Stalin trichy visit

திருச்சி ஏப் 9  பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி அகவிலைப்படி 50 சதவீத உயர்விற்கு ஏற்றார் போல் ரன்னிங் அலவன்ஸ் வழங்க வேண்டும். 29 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் 70 சதவீதம் ரன்னிங் அலவன்ஸ்க்கு வருமான வரி விலக்கு வழங்க வேண்டும். தொடர் இரவு நேர பணியை இரண்டு நாட்கள் ஆக குறைக்க வேண்டும். பயணிகள் வண்டிக்கு அதிகபட்சம் ஆறு மணி நேரமாகவும் சரக்கு வண்டிக்கு அதிகபட்சம் எட்டு மணி நேரமாகவும் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் பெண் ஓடும் தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் சார்பில் பாராளுமன்றம் நோக்கி டெல்லியில் பேரணி இன்று நடைபெற்றது அதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டச் செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார் தலைவர் பாக்கியராஜ் உதவி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர் மண்டல செயற்குழு உறுப்பினர் ஜெயாசிரில் வரவேற்று பேசினார்.
மண்டல அமைப்புச்செயலாளர் விஜய சங்கர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்

Leave A Reply

Your email address will not be published.