பாபர் மசூதி இடிப்பு தினம் : த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.8 பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்தும், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் வக்ஃப் சொத்துகள் பாதுகாக்கவும் ஜனநாயக விரோத வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தை கைவிட கோரியும் தோளில் கருப்பு துண்டு அணிந்தும் மனிதநேய மக்கள் கட்சியினர் கையில் கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டம்.
1992 இந்தியாவின் பெருமைக்குரிய வரலாற்றுச் சின்னமாக நானூற்றைம்பது ஆண்டு காலம் தொழுகை நடந்து வந்த அயோத்தி பாபரி மஸ்ஜித் சங்பரிவார மதவெறியர்களால்
பட்டப்பகலில் இடித்துத் தள்ளப்பட்டது.
இதனை கண்டித்தும், அதில் குற்றச்சாட்டப்பட்டவளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும் வருடம் தோறும் டிசம்பர் 6ம் தேதி இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர்
ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வாக்குரிமையை பறிக்கும் வகையில் பாஜக ஆட்சியில் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் அச்சுறுத்ல், வக்பு திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்,
வழிபாட்டுத்தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 50இடங்களில் தோளில் கருப்பு துண்டு அணிந்தும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தமுமுக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ்அகமது மற்றும் நிர்வாகிகள் இப்ராஹிம் ஷா, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இப்ராஹிம், அஷ்ரப் அலி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.