லால்குடியில் விற்ககப்பட்ட பெண் குழந்தை கர்நாடகாவில் மீட்பு

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள் புரத்தை சேர்ந்த ஜானகி என்பவருக்கு தகாத உறவு காரணமாக கர்ப்பமாகினார். ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை வக்கீல் பிரபு வாங்கி சென்று 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ளார். ஆனால் 80 ஆயிரம் மட்டும் ஜானகிக்கு கொடுத்து உள்ளார். இதனால் குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையில் குழந்தை விற்கப்பட்டதை அறிந்த நீதிபதி ஜானகி, பிரபு, அவரின் 2வது மனைவி சண்முகவள்ளி, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் விற்கப்பட்ட  குழந்தையை மீட்பதற்கு டிஎஸ்பி அஜய்தங்கம் தங்கம் தலைமையில் தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள புரோக்கர் ஒருவர் மூலம் விற்கப்பட்டது தெரிய வந்தது. சமயபுரம்
இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பெட்ரிக், பாண்டிய ராஜன், அபுதாகீர், செயல் அரசு ஆகிய 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டு இருந்தனர் அப்போது குழந்தையை வாங்கி விற்ற டெல்லியை சேர்ந்த புரோக்கர் கோபி என்கிற கோபிநாத்தை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது குழந்தை 5 லட்ச ரூபாய்க்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோபியை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட் அனுமதியுடன் கோபியை அழைத்துக் கொண்டு கர்நாடகாவிற்கு சென்றுள்ளனர். கர்நாடகத்தில் வெள்ளக்கவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் ஸ்டேஷன் சரகத்திற்கு உட்பட்ட ஜன்னம்மா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் குழந்தை இருப்பது தெரிய வந்தது. அவருக்கு குழந்தை இல்லாததால் டெல்லியில் சிகிச்சை பெற்ற போது, அவரை அணுகிய புரோக்கர் கோபி 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது தெரிய வந்தது. குழந்தைக்குரிய பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்களை அவர் கொடுத்துள்ளார். இதனால் முறைப்படி வாங்குவதாக நம்பி பாக்யஸ்ரீ வாங்கியுள்ளார் என்பது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கோபி, பாக்யஸ்ரீ ஆகியோருடன் போலீசார் தமிழகம் விரைந்து கொண்டிருக்கின்றனர் இந்த குழந்தையை மீட்பதற்காக தனிப்படை போலீசார் சுமார் 6000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.