பாரதிதாசன் பல்கலை. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

0 212
Stalin trichy visit

திருச்சி, ஆக.8  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்த A சம்பந்தமாக நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் கடை நிலை ஊழியர்கள் நேரில் சந்தித்து விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலா 1990 மே மாதம் முதல் 1991 பிப். வரை 9 மாதம் மட்டும் இருந்தார். அவர் இரண்டாவது முறையாக தமிழக கவர்னராக 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். 2011 ஆகஸ்ட் மாதம் வரை கவர்னராக இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாநில அரசு பல்கலைகழகங்களின் வேந்தர் பதவியை அவர் வகித்தார். சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன்களில் ஒருவரான ஜஸ்ஜித் சிங் மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.

அவர் தனது தந்தையின் பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள மாநில அரசு பல்கலைகழகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஒப்பந்தத்தை தனது நிறுவனத்துக்கு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். சில துணைவேந்தர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆனால் அந்த வழக்கு விசாரணை அளவிலேயே முடக்கப்பட்டுவிட்டதாக அப்போது கூறப்பட்டது. அதே காலக்கட்டத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்துக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் வாங்கியதில் பெரும் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைகழகத்துக்கு கம்ப்யூட்டர் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருப்பதாகவும், அதன்பேரில் நேற்ற (7ம் தேதி) ஒரு குழு பல்கலைகழகத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தவிருப்பதாகதகவல் வெளியானது அதன்படி நேற்று சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்திற்குள் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்கிகையெழுத்து பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது

மேலும் இந்த வழக்கை முடித்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் ஒரு தரப்பார் கூறுகின்றனர் இதில் எது நடந்தது என்பது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் வெளியில் வாய் திறந்தால் மட்டுமே தெரிய வரும்.

இதற்கிடையில் இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழகத்திற்குள்என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக சென்றபொழுது அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை இதனால் என்ன நடந்தது என்பது பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு மட்டுமே தெரியும்

இந்த நிலையில் அந்த காலகட்டத்தில்கடைநிலை ஊழியராக வேலை பார்த்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு உரிய காரணம் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பதும்இதுவரை தெரியவில்லை.

ஆனால் பல்கலைக்கழக ஊழியர்கள் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.