தொட்டியம் பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

0 103
Stalin trichy visit

திருச்சி, டிச.26 ​திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் தொட்டியம் பகுதியில் திமுக சார்பாக நடைபெற்ற ஒரு போராட்டத்தில், நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அரசுப் பணியில் இருக்கும் இவர்களை அரசியல் கட்சிப் போராட்டத்தில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்
(பிடிஓ) அனுமதி அளித்ததாகப் புகார் எழுந்தது. அரசு அதிகாரியின் இந்தச் செயல் நடுநில தவறியது என்றும், அதிகார துஷ்பிரயோகம் என்றும் கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர் இந்த போராட்டத்திற்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தார். போராட்டத்தின் போது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்தும், அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டைத் தவிர்க்கக் கோரியும் பாஜகவினர்  முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.