எச்.இ.பி.எஃப் தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

0 187
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5  திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்களை தொழிற்சாலைகளில் ஒன்றான எச் இ பி எஃப் தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான எச் இ பி எஃப் தொழிற்சாலை உள்ளது.

இங்கு இராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு ஆயுதங்கள் தயாரிக்கும் படுகிறது. இங்கு பல நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலைப்பாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எச் இ பி எஃப் தொழிற்சாலைக்கு இன்று காலை 10 மணியளவில் அலுவலக மின்னஞ்சலில் அலுவலக வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும்இன்னும் சற்று நேரத்தில் வெடித்து விடுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட எச் இ பி எஃப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வருவதோடு மேலும் திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு எச் இ பி எஃப் தொழிற்சாலை பாதுகாப்பு துறை ஊழியர்களின் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலையில் பணிபுரியும் இடைத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர், இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.