பூத் கமிட்டி பணிகள் : அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை

0 403
Stalin trichy visit

 

திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள
சரடமங்கலம்,ஒரத்தூர்,மால்வாய்,கல்லகம் உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி பணிகளை பார்வையிட்டு அதிமுக நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் T.ராஜாராம் தலைமையில்,மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி முன்னிலையில், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட சரடமங்கலம் பூத் எண்கள் 13,14,ஒரத்தூர் பூத் எண்கள்: 17,18,கல்லகம் பூத் எண்கள் 19,20,21,மால்வாய் பூத் எண்கள் 26,27,28 மேற்கண்ட பூத் கமிட்டி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் ராமசாமி,ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தசாமி,
ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் தினேஷ்ராஜா,ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் செல்வராஜ்
நம்புகுறிச்சி Ex.ஊராட்சி கழக செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.