சாலையில் கவிழ்ந்த போர்வெல் லாரி
திருச்சி, பிப்.5 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோணப்பாதை கிராமத்தில் போர்வெல் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார். லாரி இருந்த இருவர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பி.மேட்டூர் கிராமத்திலிருந்து போர்வெல் லாரி ஒன்று துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தது லாரியை சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சாந்தப்பன் என்பவர் ஒட்டி வந்தார் லாரி துறையூர் அருகே உள்ள கோணப்பாதை கிராமத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பிரேக் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சாந்தப்பன் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் போர்வெல் லாரி ஆபரேட்டர்களான சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பஜன்நாத் விக்கி ஆகிய இருவரும் காயம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்து சம்பவம் குறித்து போர்வெல் லாரியின் உரிமையாளரான சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த ரவி என்பவர் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.