வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

0 270
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடி சென்றனர்.

லால்குடி அருகே மாந்துறை பிரியா நகரைச் சேர்ந்தவர்நவீன் பிரகாஷ் (34). இவரது மனைவிக்கு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து அனுமதிக்கப்பட்டுள்ளா.ர் கடந்த 25ம் தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த்7 பவுன் நகையை திருடிச் சென்றனர். இந்நிலையில் தனது மனைவி பார்த்துவிட்டு நேற்று மீண்டும் மாந்துறையில் உள்ள தனது வீட்டிற்கு நவீன் பிரகாஷ் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் நவீன் பிரகாஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.