17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது
திருச்சி மார்ச். 22 திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் சகாய தாஸ் (வயது 59).இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது தனது நண்பர் பொன்னேரிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் மனைவி மேரி என்பவரிடம் தங்க சங்கிலி, நெக்லஸ், தோடு, மோதிரம் ,வளையல் உள்ளிட்ட 17 சவரன் தங்க நகைகளை கொடுத்துவிட்டு சென்றார்.பின்னர் அந்த நகைகளை மேரி திருப்பித் தரவில்லை.பலமுறை கேட்டும் திருப்பி தராமல் ஏமாற்றினார்.
உடனே இதுகுறித்து ராபர்ட் சகாயராஜ் பொன்மலை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து மேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.