மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்கு : லாரி பறிமுதல்
திருச்சி, மார்ச் 8 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் ராதா என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டி தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த பொழுது அதில் இரண்டு யூனிட் காவேரி ஆற்று மணல் அனுமதியின்றி திருடப்பட்டு வந்ததை கண்டுபிடித்தனர் இதை திருடி வந்த டிப்பர் லாரி டிரைவர் காடுவெட்டி கணேசன் (வயது 74) மற்றும் லாரியின் உரிமையாளர் மணிமேகலை (வயது 65) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா செய்து வருகிறார் மேலும் மணல் திருட பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் 2 -யூனிட் மணலை பறிமுதல் செய்து உள்ளார்.