தொட்டியம் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
திருச்சி, மார்ச் 8 திருச்சி மாவட்டம், தொட்டியம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பாபு ஆய்வு செய்தார். அவருக்கு தொட்டியம் பகுதி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்பு வழங்கினர் . நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தரப்பினர் ஆன்லைன் மூலம் வழக்குகளின் நிலமை குறித்து தெரிந்து கொள்ள கியோஸ்க் இயந்திரத்தை தொடங்கி வைத்தார். தொட்டியதற்கு புதிய நீதிமன்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்றம் வளாகம் கட்டிடம் கட்டும் பணிகளை விரைவில் முடித்து தரப்படும் என உறுதி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் நீதிபதி கோபால கண்ணன் தொட்டியம் வட்ட அனைத்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.