மணப்பாறை நகராட்சியில் ஆணையர், பொறியாளர் பணிடங்களை நிரப்ப சிபிஐ(எம்.எல்) கோரிக்கை

0 207
Stalin trichy visit

திருச்சி, ஜன.13    மணப்பாறை நகராட்சியில் ஆணையர், பொறியாளர் மற்றும் இதர பணியாளர் காலிபணிடங்களை நிரப்ப சிபிஐ(எம்.எல்) கோரிக்கை.

இது தொடர்பாக அக்கட்சியின் நகர செயலாளர் பி.பாலு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் மற்றும்
நகராட்சி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.

திருச்சி‌ மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் மக்கள் கொடுக்கக்கூடிய மனுக்கள் மீதும், மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு மணப்பாறை நகராட்சிகள் நிரந்தரமான ஆணையர் மற்றும் பொறியாளர் நியமிக்கப்படாததே முழுமுதற் காரணமாக சொல்லப்படுகிறது.

இதனாலேயே மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் நகராட்சிக்கு தேவையான போதுமான அளவிற்கு பணியாளர்களும் இல்லாமல் இருப்பதும் தெரிய வருகிறது மணப்பாறை நகராட்சி சம்பந்தமாக சில முடிவுகள் எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒப்புதல் வாங்குவதற்கு அல்லது கையெழுத்து பெறுவதற்கோ பொறுப்பாக இருக்கக்கூடிய ஆணையர் மற்றும் பொறியாளரை தேடிச் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை நகராட்சி முதன்மை நகராட்சியாக இருக்கும் சூழ்நிலையில் வாரத்திற்கு ஒருமுறை மற்றும் அவசியம் உள்ள நாட்களில் மட்டுமே மணப்பாறை நகராட்சிக்கு, ஆணையரும் பொறியாளரும் வரும்பொழுது அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான வழிவகை ஏற்படவில்லை.
ஆகவே மணப்பாறை நகராட்சிக்கு உடனடியாக நிரந்தரமான ஆணையர் மற்றும் பொறியாளர் நியமித்திடவும் மணப்பாறை நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தர பணியாளர்கள் நியமித்திடவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) நகர குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.