கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
திருச்சி, ஜன.13 தமிழர் திருநாள் பொங்கல் விழா பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் தந்தை லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார் மற்றும் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரம்ம ஞானம் தருமச்சாலை நிறுவனர் தவத்திரு அறம் மிகு அடிகளார் மற்றும் பி எஸ் ஆர் டிரஸ்ட் நிறுவனர் சேக் அப்துல்லா மற்றும் திருச்சி ஆயரின் தனிச்செயலாளர் அருள்பணி. பிரிட்டோ பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற நடனம், பறை இசை, மக்களிசைப் பாடல்கள், கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரையாக அறம்மிகு அடிகளார் உழைக்கும் மக்களின் உயர்வை கால்நடைகளின் சிறப்பை போற்றுகின்ற தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அனைவருக்கும் நன்மையை கொண்டு வந்து சேர்க்கட்டும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் காவல்துறையினரும் இச் சமூகத்திற்கு அரணாக இருக்கின்றனர் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் கனவை நனவாக்குகின்றனர், சிறந்த சமுதாயத்தை உருவாக்குகின்றனர் அவர்களை வாழ்த்துகிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து சேக் அப்துல்லா பன்மைத் துவத்தை சமத்துவத்தை கொண்டு வருகின்ற தமிழர் திருநாள் உலக மக்களுக்கு மனித நேயத்தையும் உயிர் ம நேயத்தையும் அன்பையும் அறத்தையும் போதிக்கிறது. இத்திருநாளில் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் என்று சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து அருள் பணி. பிரிட்டோ பிரசாந்த் அடிகளார் இயற்கையை மானுடத்தை உழைக்கும் உழவர்களை விளைச்சலை உருவாக்குகின்ற கால்நடைகளை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்ற திருநாள் அனைவருக்கும் நன்மை, வளமை இனிமை பெருக பொங்கட்டும் என்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் செயலர் தந்தை ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மிருதங்கத்துறை தலைவர். எஸ் .டி மூர்த்தி நன்றி கூறினார். இந்நிகழ்வை தமிழ் த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் தொகுத்து வழங்கினார்கள். மாணவர்கள் மாணவியர்கள் பெற்றோர்கள் பங்குப்பெற்று பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.