தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக செயல்படும் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

0 223
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 18 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடும் அவலம். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வுக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாசு படிந்த நீருக்கு பதிலாக தெளிந்த நீரை பரிசோதனைக்கு எடுத்துச்சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காட்டூர் பகுதியில் இயங்கி வரும் கோத்தாரி சர்க்கரை எரி சாராய ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது ஆலையை சுற்றியுள்ள சிறுமயக்குடி, பின்னவாசல், செம்பரை, திண்ணியம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் நிலத்தடி நீரில் கலந்து மாசு படிந்துள்ளது.

இதனால் விவசாய நிலங்களில் பயன்படுத்தி வரும் ஆழ்துளை கிணற்றில் கிடைக்கும் தண்ணீரானது முற்றிலும் நிறம் மாறி கருஞ்சிவப்பு நிறத்தில் மாறி அசுத்தமாக வருகிறது. மேலும் அனைத்து கிராம பகுதிகளில் நிலத்தடி நீரும் மாசு படித்ததால் வீடுகளில் போடப்பட்டிருக்கும் போர்வெல்லில் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வெளியேறுகிறது.

இதனை சீர் செய்யும் வகையில் ஆலைகளுக்கு கட்டுபாடு விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தியாகு என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் போர்வெல் குடிநீர் ஆகியவற்றின் நீரை பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராசன் தலைமையில் அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில் உள்ள தண்ணீரை ஆய்வை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆலையை சுற்றுயுள்ள கிராமத்திற்கு சென்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்குள்ள வீடுகளில் வரும் தண்ணீரை பரிசோதனைக்காக எடுத்தனர்.

அப்போது பொதுமக்கள் இந்த தண்ணீர் தெளிவாக வரும் தண்ணீர் எங்கள் பகுதியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து செல்லுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியராசன் உங்கள் எண்ணம் போல் பரிசோதனைக்கு தண்ணீர் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு பணம் கட்டவேண்டும் என கூறினார்.

ஒரு லட்சம் ரூபாய் கூட பணம் கட்டுகிறோம் எங்களுக்கு முறையாக தீர்வு கிடைக்க நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என கூறினர்.

இருப்பினும் தொடர்ந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்ற அதிகாரிகள் மாசு படித்து வரும் நீரை பரிசோதனைக்கு எடுக்காமல் கண் துடைப்பிற்காக ஊராட்சி ஒன்றி மேல்நிலைப் நீர்த்தேக்க தொட்டியில் வரும் தண்ணீரை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

விவசாய போர்வெல்லில் கிடைக்கும் அசுத்தமான தண்ணீரை பரிசோதனைக்கு எடுக்காமல் தூய்மையான தண்ணீர் வரும் பகுதியில் பரிசோதனைக்காக தண்ணீரை எடுக்கும் பணியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.