திருச்சியில் கோழி இறைச்சி கிலோ ரூ.30 உயர்வு
திருச்சி, ஜூலை 6 திருச்சியில் கோழி இறைச்சி கிலோ ரூ.30 உயர்வு
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கோழி இறைச்சிக்கு முக்கிய இடம் உண்டு. திருச்சியில் கடந்த வாரம் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனையானது. மேலும் தோல் நீக்கியது கடந்த வாரம் கிலோ ரூ.240-க்கு விற்பனையானது. தற்போது ரூ.270-க்கு விற்பனையானது. நாட்டுக்கோழி உயிருடன் ரூ.300-க்கும், இறைச்சி கிலோ ரூ.400-க்கும் விற்பனையானது. இதே போல் ஆட்டு இறைச்சி கிலோ 900-க்கு விற்றது. கோழி இறைச்சி விலை உயர்வால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்தனர்.