திருச்சியில் “அமீர் அரேபியன் மந்தி” குடும்ப உணவகம் திறப்பு

0 589
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6 திருச்சியில் “அமீர் அரேபியன் மந்தி” குடும்ப உணவகம் திறப்பு விழா – அரசு டவுன் ஹாஜி திறந்து வைத்தார்

கீழக்கரை அமீர் அரேபியன் மந்தியின் மற்றொரு மைல் கல்லாக
திருச்சி மரக்கடை பகுதியில் “அமீர் அரேபியன் மந்தி ஃபேமிலி ரெஸ்டாரன்ட்” திறப்பு விழா இன்று நடைபெற்றது. சன் சைன் ஹஜ் டிராவல்ஸ் உரிமையாளர் பஸல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அரசு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான் மன்பஈ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார். முன்னதாக திறப்பு விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை அமீர் அரேபியன் மந்தியின் உரிமையாளர் அமீர் சாதிக் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் இந்த விழாவில் எஸ்.எஸ்.ஷாஜகான், அற்புதராஜ், கீழக்கரை ஜகுபர் உசேன், கரீம் ரெடிமேட்ஸ் உரிமையாளர் கரீம் உள்பட உறவினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த அமீர் அரேபியன் மந்தி உணவகத்தில் முழு ஆடு மந்தி, மட்டன் மந்தி, சிக்கன் மந்தி, மீன் மந்தி உள்ளிட்ட மந்தி வகைகளும், கப்ஸா, மஜ்பூஸ், மஃக்ளுபா, பிரியாணி, சைனீஸ் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், சவர்மா, பரோட்டா, நான், தந்தூரி, டிக்கா, சீக் கபாப் உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரமலான் நோன்பு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் சஹர் சாப்பாடு குறைந்த விலையில் விதவிதமான வகைகளில் வழங்க உள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் அமீர் சாதிக் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.