மணச்சநல்லூரில் ஊராட்சியில் சமுதாயகூட கட்டிடம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 521
Stalin trichy visit

திருச்சி, பிப். 29  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.ஆர்.பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.36.61 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு  நேற்று மதியம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் சணமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு பசுமை திட்டத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் விருச்சக சோலை நாற்றங்காலை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திறந்து வைத்து மரக்கன்றுகளை ஏற்றி செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .இவ்விழாவில் 22 பயணாளிகளுக்கு ரூ. 13,2000 மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களையும்,7 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவிகளும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன்,  மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சீனிவாசபெருமாள், வளர்ச்சித் துறை மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.