முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை : ட்ரோன்கள் பறக்கத் தடை

0 324
Stalin trichy visit

திருச்சி, பிப்.1 திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நிறைவு விழாவில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.2 ஆம் தேதி அன்று திருச்சிராப்பள்ளி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நிறைவு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதை முன்னிட்டு நாளை (02.02.2025) சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (01.02.2025) முதல் தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் நாளை (02.02.2025) வரை மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.