வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் சுறுசுறுப்பு: முதல்வர் உத்தரவு

0 128
Stalin trichy visit

திருச்சி, நவ.24  முசிறி நகர செயலாளர் போன் லைனுக்கு வந்த தமிழக முதல்வர் – வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் சுறுசுறுப்பு காட்ட உத்தரவு.

திமுக கழக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் நேற்று முசிறி நகர செயலாளர் இடம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு கழகப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

முசிறி திமுக நகர செயலாளராக பதவி வகிப்பவர் சிவக்குமார். தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முறை பணிகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுகவின் பி எல் எ டு குழுவும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் விடுபட்டு விடாமல் பார்த்துக் கொள்வதோடு வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.இதற்காக பல மாதங்களுக்கு முன்பிருந்தே கட்சி நிர்வாகிகளை நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து தற்போது திமுகவின் தலைமை அவர்களை களத்தில் இறக்கி விட்டிருக்கிறது .இப்பணிகளை ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட மாநில நிர்வாகிகள் தலைமையின் அறிவுறுத்தல்களை கேட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சென்னையிலிருந்து நகர செயலாளர் சிவகுமாருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது.ஃபோனில் பேசியவர் தலைவர் பேசுகிறார் பேசுங்கள் என கூறியுள்ளார்.உடனடியாக சுதாரித்துக் கொண்ட நகர செயலாளர் சிவகுமார் –
முதல்வர் மு க ஸ்டாலின் உடன் உரையாற்றியுள்ளார். நகர செயலாளர் உடன் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முசிறியில் உள்ள வாக்காளர்களின் விபரங்கள் , தற்போது சுருக்கமுறை எவ்வளவு படிவங்கள் எவ்வளவு பேர் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளனர் .கழக நிர்வாகிகள் பி எல் எ டு ஆகியோர் முறையாக பணியாற்றுகின்றனர்களா, வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதை கேட்டுள்ளார்.அதற்கு உரிய பதிலை நகர செயலாளர் சிவகுமார் தெரிவித்த நிலையில் பணிகளை தொய்வின்றி, சுறுசுறுப்பாகவும், உரிய காலத்திற்குள் செய்து முடிக்குமாறு தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.தலைமை அறிவுறுத்தியபடி செய்து முடிப்பதாக நகர செயலாளர் சிவக்குமார் முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் கழக நிர்வாகியிடம் அதிரடியாக தொலைபேசி வழியாக பேசி கட்சிப் பணிகள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிகழ்வு கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.