முதலமைச்சர் திருச்சி வருகை : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, மே 7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு நாளை (மே8) காலை 12.00 மணிக்கு வருகை தரும் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்பது அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் துவாக்குடியில் மதியம் 1.00 மணி அளவில் நடைபெறும் மாதிரி பள்ளி திறப்பு விழா நிகழ்விலும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநில மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் வட்ட வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அனைத்து நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.