விநாயகர் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்
திருச்சி, ஆக.18 விநாயகர் வேடம் அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த இந்து முன்னணி..
திருச்சி மாநகர் 62 ஆவது வார்டு ராமச்சந்திர நகர் பகுதியில் இந்து அறநிலைக்கு சொந்தமான 10 ஏக்கர், 80 செண்ட் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. ஆகையால் இன்று நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விநாயகர் வேடம அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
மேலும் ராமச்சந்திர நகர் பகுதியில் இந்து அறநிலைக்கு சொந்தமான இடத்தை உடனடியாக மீட்டெடுத்து அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த விநாயகர் சிலை அமைத்து நிரந்தரமாக மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஒட்டி அதே இடத்தில் விநாயகர் சிலை வைத்து மக்கள் பூஜை செய்து வழிபட உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.