டாஸ்மாக் பார்கள் மூடல் : திறந்தவெளியில் மது குடித்தவர்களால் பொதுமக்கள் அவதி

0 19
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  டாஸ்மாக் கடைகளுடன் இருந்த ‘பார்’கள் மூடல்
திறந்தவெளியில் மது குடித்தவர்களால் பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2,700 கடைகள் ‘பார்’ எனப்படும் மதுக்கூடங் களுடன் உள்ளன. இந்த பார் களுக்கான ஒப்பந்த காலம் ஜூன் 30-ந்தேதியுடன் முடிவ டைந்து விட்டது. இதன் கார மாக அனைத்து பார்களும் ஜூலை 1-ந்தேதி முதல்மூடப் பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். இதன்படி  அனைத்து பார்களும்  மூடப் பட்டன.

இதைத்தொடர்ந்து திருச்சி நகரில் உள்ள டாஸ்மாக் மது பான கடைகள் முன் ‘தற்காலிகமாக பார்கள் மூடப்பட்டு உள்ளன என்ற வாசகங்கள் அட்டையில் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டு இருந் தன. பார்கள் மூடப்பட்ட தால் மது பாட்டில் வாங்கிய மது பிரியர்கள் அந்த பாட் டில்களை கடை அருகில் உள்ள திண்ணைகள், திறந்த வெளியிடங்கள், மற்ற கடைக ளின் முன் பகுதியில் அமர்ந்து மது குடித்தார்கள். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தார்கள்.

திறந்தவெளி மற்றும்பொது இடங்களில் மது குடிப்பதற்கு அனுமதிக்க கூடாது. மது பாட்டில் வாங்குபவர்கள். அவற்றை மறைவான இடங்க ளுக்கு கொண்டு சென்று குடிக்கவேண்டும். மீறி-பொது இடங்களில் மது குடித்தால் அவர்கள் மீது போலீசார். நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.