ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது: லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

திருச்சி பொன்மலை பகு தியை சேர்ந்தவர் சக்தி கணபதி. இவர் தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்புக்கான சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக திருச்சி மாநக ராட்சி மண்டலம் எண்-4 அலுவலகத்தில் விண்ணப் பித்து இருந்தார். அவரது விண்ணப்பம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மண்டல அலுவலகத்தில் இருந்த மாநகராட்சி பில்-கலெக்டர் ராமமூர்த்தியை (வயது 42) சக்திகணபதி அணுகினார். அப்போது ராமமூர்த்தி, அவரிடம் ரூ.5 ஆயி ரம் லஞ்சமாக கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர். பின்னர் ரசாயனபொடி தடவிய பணத்தைசக்திகணபதியிடம் கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து மாநகராட்சி மண்டல அலுவலகம் எண் 4-ல் ராமமூர்த்தியிடம் லஞ் சப்பணத்தை சக்தி கணபதி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக் டர் சக்திவேல் தலைமையிலான போலீசார், ராமமூர்த்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.