விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய முதல்வர் விஜய் : திருவேடு ஏந்தி பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி, மே 29 விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய முதல்வர் விஜய் – திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயகடன் வாங்கியவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டு உள்ளார்
அதாவது ரூ. 50000 கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் ரூ.60000 கடன் ரூ.40000 தள்ளுபடி செய்யப்படும் ரூ.70000 கடன் ரூ.30000 தள்ளுபடி செய்யப்படும் 80000 கடன் 20,000 தள்ளுபடி செய்யப்படும் ரூ.90000 கடன் ரூ.10000 தள்ளுபடி செய்யப்படும் ஒரு லட்சத்திற்கு மேல் 5ரூ.000 தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்
இந்நிலையில் இந்த அறிவிப்பானது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனவும் தேர்தலுக்கு முன்பு 5 ஏக்கருக்குள் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக விவசாய கடன் தள்ளுபடி எனவும் 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி எனவும் அறிவித்துவிட்டு தற்பொழுது இந்த அறிவிப்பை வெளியிட்டதை கண்டித்து தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும்
ரூ.1350 க்கு விற்ற உரம் தற்பொழுது 2350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் தெருவில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் எனவே 5 ஏக்கர் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்
மேலும் திமுக ஆட்சியில் ரூ. 9000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.12000 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இப்போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது