திருச்சி ரெயில்வே கோட்ட இயந்திரப் பராமரிப்பு பொறியாளரை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 1,489
Stalin trichy visit

திருச்சி, மே 29  திருச்சி ரெயில்வே கோட்ட இயந்திர பொறியாளர் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் சர்வாதிகாரத்தனத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரயில்களில் பிரேக், வீல் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா, பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கண்காணிக்கவும் அதை சரிப்பார்க்கும் பணியையும் C and W பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மேற்கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு திருச்சி கோட்ட முதுநிலை இயந்திரப் பொறியாளர்  உரிய பாதுகாப்பான உபகரணங்களை வழங்குவதில்லை.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு தினமும் 172 ரயில்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன சென்று கொண்டிருக்கின்றனர். அந்த ரயில்களை பராமரிக்கும் பொறுப்புகள் ஒரு சிலவற்றை எங்கள் தொழிற்சங்கத்திடம் கேட்காமல் வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அவர்கள் 23 பெட்டிகளை பராமரிக்க வெறும் 2 பேர் தான் பணியில் இருக்கிறார்கள். அதனால் அந்த பணிகளை முழுமையாக மேற்கொள்ளப்படுவதில்லை.

இயந்திரப்பொறியாளரின் சர்வாதிகாரத்தனத்தால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என குற்றம்சாட்டி எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இயந்திரப்பொறியாளரை கண்டித்தும், பராமரிப்பு பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்க வலியுறுத்தியும் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.