சாதி பெயர்கள் நீக்குவது தொடர்பான கமிட்டி சபா கூட்டம்

0 166
Stalin trichy visit

மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் சாதி பெயர்கள் நீக்குவது தொடர்பான கமிட்டி சபா கூட்டம் .

தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வது வார்டில் நடைபெற்ற பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார்.
செயல்அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் சம்பத்குமார் கூட்டத்தின் நோக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினர். அப்போது தமிழ்நாடு அரசு சாதி பெயர்களில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்றி சுதந்திரப் போராட்ட தியாகிகள், மற்றும் தமிழ் மொழிக்காகவும் தேசத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் பெயர்கள் வைப்பதற்கான அரசு உத்தரவு குறித்து பொதுமக்கள் மத்தியில் விபரமாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுமக்கள் 15 வது வார்டில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வரும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும் மாசில்லா தீபாவளியாக கொண்டாட கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள காலை 6 to 7 மற்றும் மாலை 6 to 7 நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்கவும், ஒலி மாசு ஏற்படுத்தாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் இல்லம் தேடி வரும் துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்குமாறும், மழைக்காலமாக இருப்பதால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்துமாறும், மழை நீர் தேங்கா வண்ணம் சுற்றுச்சூழலை பராமரித்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர் தியாகராஜன், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.