மணப்பாறை மதுரை சாலையிலுள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வட்டாட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் மனு
மணப்பாறை வட்டாட்சியர்யிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரகுழு சார்பில் நகர செயலாளர் ஜனசக்தி உசேன் நிர்வாககுழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் சௌக்கத்அலி நல்லுச்சாமி ஆகியோர் மணப்பாறை மதுரை சாலையில் உள்ள தனியார் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மனு. கொடுத்தனர்
அம் மனுவில் மணப்பாறை மதுரை சாலையில் உள்ள தனியார் மதுக்கடையை அருகில் அரசு ஆண்கள்,பெண்கள் மேல் நிலைப் பள்ளியும் தனியார் கேட்டரிங் கல்லூரியும் இயங்கி வருகிறது டி.எஸ்.பி மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு செல்லும் பாதை அருகில் மதுகடை உள்ளது
எதிர்ப்புறம் கல்லாத்துப்பட்டி, பூமாலைபட்டி பிரதான சாலை அமைந்துள்ளது மேலும் அருகில் இலட்சுமி நாராயண நகர் இவ்விரு பகுதிகளிலிருந்தும் மதுக்கடை உள்ள பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது
மதுக்கடை சாலையின் ஓரத்தில் உள்ளது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது
இந்த மதுக்கடை துவங்கும்போதே இங்கு துவங்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த அரசு எதிர்ப்புகளை கடந்து இந்த இடத்தில மதுக்கடையை துவங்கியது
துவங்கிய நாளிலிருந்து இன்றுவரை விபத்துகள் ஏற்ட்படுவருகிறது தமிழக அரசு உடனடியாக இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறிவுள்ளனர்