சமுதாய நல்லிணக்க நலத்திட்ட உதவிகள்: சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார்

0 419
Stalin trichy visit

திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் த. இனிகோ இருதயராஜ் அவர்கள் சார்பில் ரமலான் மற்றும் சமுதாய நல்லிணக்க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மேலரண் சாலை தேவர் அரங்கில் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் ஏழை எளியவர்களுக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்புடைய தையல் இயந்திரங்கள், தள்ளு வண்டிகள், இஸ்திரி பெட்டிகளையும் இனிகோ இருதயராஜ் MLA அவர்கள் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மவுலானா முஹமது அப்துல்லா யூசுபி,அருட்தந்தை பி.எஸ். எ.ரெக்ஸ், சௌந்தர் குருக்கள்,மருத்துவர் அஸ்ரப்,ரேவதி முத்துசாமி, மாநகர துணை மேயர் திவ்யா, மாநகராட்சி 3வது மண்டலக் குழு தலைவர்.மதிவாணன், 2 வது மண்டலக் குழு தலைவர்.ஜெய நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக பொறுப்பாளர்கள் மணிவேல்,மருந்து கடை மோகன், டி.பி.எஸ்.எஸ். ராஜ் முகமது, வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக,வட்டக் கழக நிர்வாகிகள்,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.