திருவாசியில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய இருவர் கைது

0 86
voc

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி பேருந்து நிலையம் அருகே மாருதி காரில் 76 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி பேருந்து நிலையம் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் வாத்தலை காவல் உதவி ஆய்வாளர் அமமையப்பன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார்ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ், விமல் பான் மசாலா, பான்பராக் உள்ளிட்ட 76 கிலோ மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்தனர் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் லால்குடி அருகே ஆதிகுடி வடக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் 49 வயதான பக்ருதீன், லால்குடி உமர் நகரை சேர்ந்த முகமது உசேன் மகன் 42 அப்துல்ரகுமான் என தெரியவந்தது.பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வாத்தலை போலீசார் இருவரையும் கைது செய்து தொட்டியம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 76 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!