கவாத்து பயிற்சி நிறைவு : காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை
திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு 15 நாட்கள் நடந்த நினைவூட்டல் கூட்டுத்திறன் கவாத்து பயிற்சி நேற்று நிறைவடைந்ததை யொட்டி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கலந்து கொண்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு 15 நாட்களாக நினைவூட்டல் கூட்டுத்திறன் கவாத்து பயிற்சி நடந்து வந்தது. இதில் தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நேற்று நிறைவடைந்தது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கவாத்து பயிற்சி நிறைவு விழாவில் திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண் டார். மேலும் ஆயுதப்படை காவலர்கள் பணிகள் தொடர்பான அறிவுரை கள் வழங்கினார், மேலும் காவலர்களின் குறைகளை யும் கேட்டறிந்தார்.