தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து அறநிலையத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதில் முக்கியமாக கருதப்படுவது, தற்போது தரிசனத்திற்கு அதிக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டதை ரத்து செய்து ஒரே கட்டண முறையை அமல்படுத்தி, இலவச தரி சனம், கட்டண தரிசனம் என 2 வரிகளை உருவாக்கி
வருகிறது. தற்போது முதற் கட்டமாக திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஒரேகட்டணமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக திருச்சி குணசீலம் பெருமாள் கோயிலில் இலவச தரிசன முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் ஒருவருக்கு கற்பூர ஆராத்திக்கு 0.5 பைசாவும், அர்ச்சனைக்கு அஷ்டோத்திர சீட்டு ரூ.2 எனவும், சிறப்பு சேவைக்கு ரூ.10ம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. இது தவிர பல்வேறு கட்டண முறைகளும் உள்ளது. இதில் அனைத்து பக்தர்களுக்கும்
ரூ.2க்கான அஷ்டோத்திர அர்ச்சனை சீட்டு இலவச தரிசன வரிசையில் செல்லும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களை கட்டாயமாக அர்ச்சனைக்கான ரூ.2 கட்டண சீட்டை வாங்க வேண்டும் என கூறி அங்குள்ள பணியாளர்கள் பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் வேறு வழியின்றி பக்தர்கள் தலா ரூ.2 வீதம் செலுத்தி அர்ச்சனை (அஷ்டோத்திர) கட்டண சீட்டை வாங்கி இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் சென்று பெருமாளை தரிசிக்கின்றனர். இதுகுறித்து வெளியூர் பக்தர்கள் மிரட்டினால்
டிக்கெட் வாங்கினால் உள்ளே விடுவோம். இல்லையெனில் வெளியே போங்க என மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். தமிழகத்திலேயே இலவச தரிசன முறையை இல்லாத கோயிலாக குணசீலம் பெருமாள் கோயில் மாறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்படி வழங்கப் படும் அர்ச்சனை (அஷ்டோத்திர) சீட்டுகளில் தேதிகள் குறிப்பிடப்படாமலும்
வழங்கப்படுகிறது. இது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குணசீலம் பெருமாள் கோயிலில் விசாரணை செய்து இலவச தரிசன முறையை உறுதி செய்ய வேண்டும். மேலும் தேதி குறிப்பிடாமல் வழங்கப்படும் கட்டண சீட்டுகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.