திருச்சியில் சாலையில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இருசக்கர வாகனம் ஒர்ஃஷாப் வைத்துள்ளவர் அழகர்சாமி. இவர் மத்திய பேருந்து நிலைய புதுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் அவரது நண்பரை பேருந்தில் ஏற்றிவிட்டு வரும்பொழுது கீழே கிடந்த ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணத்தை கண்டதும் அதனை கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மணப்பாறையை சேர்ந்த மனோ விஜய சங்கர் என்பவர் என தெரியவந்தது. இதனை அடுத்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், பணத்தை எடுத்துக் கொடுத்த அழகர்சாமி என்பவரை அழைத்து அவரது நற்செயலை பாராட்டும் பொருட்டு சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.
மேலும் ஒரு இலட்சம் பணமானது உரிய ஆவண சரிபார்க்கப்பட்டு உரிய நபரான மணப்பாறை சேர்ந்த மனோ விஜய் சங்கர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.