திருச்சி ஐ.ஐ.எம் (PGPM ) பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கி பாராட்டு!

திருச்சி இந்திய மேலாண்மை கழகம் சார்பில் நடைபெற்ற பி.ஜி.பி.எம் படிப்பில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தங்க பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் உடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதக்கம் வென்றவர்கள் திருச்சி ஐ.ஐ.எம் சகோதரத்துவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சி ஐஐஎம் டீன் டாக்டர் தீபக் குமார் கூறுகையில்..”பதக்கம் வென்ற வீரர்களின் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், நிறுவனத்திற்கும் தொழில் துறைக்கும் இடையே பாலமாக திகழ்வதாகவும், நிஜ வாழ்கையில் வகுப்பறை கற்றல் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்” எடுத்துக் கூறினார்

click the image to chat on whatsapp
தொடர்ந்து திருச்சி ஐஐஎம் இயக்குனர் டாக்டர் பவன் குமார் சிங் கூறுகையில்…”சுற்றுப் புறங்களில் இருந்து ஆற்றலை பெறுவதன் முக்கியத்துவத்தையும் உடல் மன மற்றும் ஆன்மீக அமைதி அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். மேலும் மாணவர்கள் பாராட்டுவதற்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கும் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஒருவரின் வாழ்க்கையில் வெவ்வேறு புள்ளிகளில் அதிகாரம் மற்றும் பொறுப்பு நிலை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். அனுபவமே சிறந்த ஆசிரியர் என்பதற்கு உதாரணங்கள் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்தினார்”
தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் பி.ஜி.பி.எம் தொகுதியில் 2018 – 2020 பிரிவில் முதல் பெற்றதற்காக நிவிசா தங்கப்பதக்கம் வென்றார். பெண்கள் பிரிவில் முதல் ரேங்க் இருக்காத பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் ரேங்க் பெற்ற வட்லமுடி ஸ்வேதாவுக்கு இயக்குனரின் தங்கப்பதக்கமும் சிறந்த all-round நடிப்பிற்கான கோட்டக் செக்யூரிட்டீஸ் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.
மூன்றாம் இடத்தைப் பெற்ற கார்த்திகேயனுக்கு கனரா வங்கி சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பிஜிஎம் 2019 2021 பேச்சில் முதல் ரேங்க் பெற்றதற்காக நரலா தேஜஸ்வினிக்கு ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக தங்க பதக்கமும், இரண்டாம் இடம் பிடித்த கருதிலா வைஷ்ணவிக்கு இயக்குனரின் தங்க பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர் கார்த்திக் தண்டபாணி, பிஜிபிஎம் பேராசிரியர் அலோக் குமார் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8