மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வாழ்த்து

0 281
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா போட்டி நடைபெற்றது.இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை நடனம், இசை, ஓவியம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் ஓவியம் மற்றும் இசைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனையடுத்து நாளை 27 மற்றும் 28ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டியில் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இசைப்போட்டியில் கயிலை வாத்தியம் நாத சங்கம், குழு இசை போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கு செல்லும் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமையில் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பினார்.

இந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் பவுல் ஜோசப் வின் வின்சென்ட், கலையாசிரியர் விஜயபாஸ்கர், ஆங்கில ஆசிரியர் சரவணன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.