காங்கிரஸ் மறுசீரமைப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
திருச்சி, நவ.25 தேசிய அளவில், கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க, காங்கிரஸ் கட்சி சார்பில், ‘சங்கதன் ஸ்ரீஜன் அபியான்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அகில இந்திய அளவில் உள்ள மூத்த தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக திருச்சி தியாகி அருணாசலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணை பொருளாளர் – அகில இந்திய சொத்து பாதுகாப்பு குழு தலைவர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் இந்தர் சிங்கிலா தலைமையில் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் இந்தர் சிங்கிலா கூறும்போது..,
அனைத்து தரப்பினரும் அளிக்கும் பரிந்துரையை ஏற்று, காங்கிரஸ் கட்சியை ஒரு பலமான மக்கள் தொடர்புள்ள கட்சியாக ஏற்படுத்த உள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.