தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுத்திடும் வகையில் மாநில அளவில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட அளவில் குறும்பட போட்டி, மீம்(Memes) உருவாக்கும் போட்டி, தொடர் முழக்க சொற்தொடர் போட்டி கொரோனா விழிப்புணர்வு ஒட்டிகள் உருவாக்கம், ஆகியவை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொள்ளுமாறும், போட்டியில் வெற்றிபெறும் படைப்புகளுக்கு சிறந்த பரிசுகளும், அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது என்றும்,
படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும், வயது வரம்பு இல்லை, குறும்படம் 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், குறிப்பிட்ட நபர், மதம் குறித்த கருத்துக்கள் நிராகரிக்கப்படும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும், படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் (06/08/2021)ஆம் தேதிக்குள் படைப்புகளை trichycovidcontrol@gmail.com அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிக்கும், 9952611108 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் அனுப்ப வேண்டும் என்றும், http://facebook.com/trichycovidcontrol என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA