மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு…

0 269
Stalin trichy visit

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர், கரூர், மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பிரதான பகுதியாக அமைந்துள்ளது. அதிக மக்கள் வந்து செல்லும் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடங்களில் பூக்கடை, பழக்கடை, தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்து பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

இதனால் பயணிகள் நிற்க இடமில்லாமல் மிகவும் சிரமப்படுவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்து பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன பொது கழிப்பிடங்களை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மண்டல கோட்ட தலைவர் துர்கா தேவி, உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்…

Leave A Reply

Your email address will not be published.