அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

0 18
Stalin trichy visit

திருச்சி, செப்.16  திருச்சியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம், ரூ.100 கோடிக்கும் அதிகமான மோசடி புகாரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரும் திமுக பிரமுகருமான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்று ஏமாற்றியதாக எழுந்த புகாரின் பேரின் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெறும் அன்பில் மகேஸ் வீட்டுக்கு வெளியே திமுக தொண்டர்கள் வரத் தொடங்கியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.