சி.எஸ்.ஐ. மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

0 343
Stalin trichy visit

திருச்சி ஆக. 3  திருச்சி உறையூர் சி எஸ் ஐ மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 114 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தடகள பயிற்சியாளர்கள் அண்ணாவி மற்றும் சுகந்தி ஆகியோர் கலந்துகொண்டு புறாக்களை பறக்க விட்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். விழாவின் தொடக்கமாக மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்திய அணியினர் வெற்றி வாகை சூட வாழ்த்தும் இதமாக 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஒலிம்பிக் வளையம் போல் நின்று தங்களின் வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொண்டனர்.

மேலும் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிகளின் நடனம் அதனைத் தொடர்ந்து 100 மீட்டர் ஓட்ட போட்டி மற்றும் பள்ளி மாணவிகளின் சாகசங்கள் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஆசிரியர்கள் நளினி கிருபாநிதி மோனிகா தாளாளர் வனஜா சலோமி மற்றும் மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.